Skip to content
Home » கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…

  • by Senthil

கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பலநூறாண்டுகள் பழமையான இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி,

செளந்தரநாயகியம்மன் தேரில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது நான்கு மாட வீதிகளில் சுற்றி வந்து நிலையை வந்தடைந்தது. இதனை ஏராளமான பக்தத்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!