கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர் ,மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள்
நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவித்து பிறகு பொதுமக்கள் வழங்கிய நறுமணப் பூக்களால் சிறப்பு அலங்கரிக்கப்பட்ட நந்திக்கு சிறப்பு தீபாராதனைகள் கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.