திமுக கூட்டணியில் கரூர் தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்று இரவுக்குள் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது. தற்போதைய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மீண்டும் போட்டியிட விரும்புகிறார். அதே நேரத்தில் அவருக்கு கட்சியில் எதிர்ப்பு அலையும் வீசுகிறது.
இந்த நிலையில் கரூரின் பல்வேறு பகுதிகளிலும், சோனியா காந்தி, தளபதி மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களிப்பீர் என்று சுவர் விளம்பரம் எழுதப்பட்டு வருகிறது. இதனால் கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கண்டிப்பாக ஜோதிமணியே என பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.