கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பண்டரிநாதன் சன்னதிதெரு உள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்க ராஜ விட்டல்நாதர் கோவிலில் 102 – ஆம் உறியடி உற்சவம் நடந்தது. கோவில் முன் நடந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞரர்கள் கலந்து
கொண்டு வழுக்கு மரம் ஏறினர். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், பண்டரிநாதர் திருவீதி உலா வாணவேடிக்கையோடு நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு திருக்குறள் பேரவை சார்பில் பரிசு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்