கரூர் தனியார் திருமண மண்டபத்தில் கரூர் கேரள சமாஜம் சார்பில் 2024ஓனம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓனம் திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மற்றும் மாநிலத்தில் வாழும் கேரளா மக்கள் தாங்கள் வசதிக்கேற்ப நிகழ்ச்சிகள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக அவரது பாரம்பரிய நிகழ்வுகளை நடத்தி வரும் நிலையில் கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் கேரள சமோஜம் ஓனம் திருவிழா 2024 என்ற தலைப்பில் ஓணம் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் வாழும் கேரளா மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கேரளா உடைய அணிந்து பெண்கள் கலந்துகொண்டு தங்களது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கரூர் கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கேரளா பெண்கள் கேரளா உடை அணிந்து பாடலுக்கு நடனம் ஆடினர் நிலையில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் வண்ண உடைய அணிந்து நடனம் ஆடினர். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவி முருகன் பாடலை தனது அழகான குரலில் பாடி அசத்தார். கல்லூரி மாணவிக்கு போட்டியாக மாணவனும் தளபதி விஜய் பாடலுக்கு நடனமாட அரங்கமே அதிர்ந்தது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் கேரளா சமாஜம் குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்தனர்.