கரூர் வெண்ணெய் மலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலம் சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நிலம் மற்றும் வணிக கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இந்து அறநிலைத்துறையின் சார்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு சீல்
வைக்கும் பணியில் ஈடுபட உள்ள நிலையில் இதனை கண்டித்து அப்பகுதி வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அப்போது சார்ந்த பொதுமக்கள் இன்று கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி ஆலய நிர்வாகத்தின் சார்பாக அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் மீதம் உள்ள இன்று நான்கு கடைகளுக்கும், சில வீடுகளுக்கும் சீல் வைக்கும் பணி நடைபெற உள்ளதாக தகவல் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.