Skip to content

கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குதல், புதிய வகுப்பறைகள் காட்டுவதற்க்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.70 கோடி மதிப்பில் 8 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிக்கு கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும் கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், சின்னசேங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 332 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளையும் வழங்கினார்.

மேலும் பிச்சம்பட்டி அரசு துவக்கப்பள்ளி, கோவக்குளம் மற்றும் மணவாசி அரசு நடுநிலைப் பள்ளிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூபாய் 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் கிளாஸ்

வகுப்பினையும், அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.7.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான புதிய சமையலறை கட்டிடத்தையும் திறந்து வைத்தார் .

இந்நிகழ்வின் போது யூனியன் சேர்மன் சுமித்ரா தேவி, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேது மணி, பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா, திமுக கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, கிருஷ்ணராயபுரம் பேரூர் கழகச் செயலாளர் சசிகுமார், பழைய ஜெயங்கொண்டம் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், மணவாசி ஊராட்சி மன்ற தலைவர் சிவா, சேங்கல் ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி பாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருபால் ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!