கரூர் மாவட்டம் வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட K. பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி ச்சம்பட்டி கிராமத்தில் சாலையின் இருபுறமும் சவுக்கு மரம் நடப்பட்டு அதில் திமுக கொடி கட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதேப்பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகருமான பாரதி (54) என்பவர் வீட்டின் முன்பு ஊன்றப்பட்டிருந்த திமுக கொடி கம்பங்களை பிடுங்கி எறிந்ததோடு தாளைப்பட்டி வளைவு பகுதியில் ஊன்ற பட்டிருந்த 30 கொடிக்கம்பங்களை வளைத்து கீழேயும் விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் மாவட்ட திமுக தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் M. ரகுநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வெள்ளியணை போலீசார் நாதக பிரமுகர் பாரதியை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.