Skip to content
Home » கைத்தறி கண்காட்சி… கரூரில் ரூ.14.90லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி..

கைத்தறி கண்காட்சி… கரூரில் ரூ.14.90லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி..

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கரூர் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள செங்குந்தர் மஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது.

தேசிய கைத்தறி தினமானது வருடந்தோறும் கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்க ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. தேசிய கைத்தறி தினமானது கடந்த 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7- ஆம் நாள் சுதேசி இயக்கத்தின் துவக்கமாகவும் பொதுமக்களால் நடத்தப்பெற்ற சுதந்திரப் போராட்டத்தினை நினைவு கூறும் விதமாகவும். உள்நாட்டு உற்பத்திப்பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவு தொழிலானது விவசாயத்திற்கு அடுத்தபடியாக கௌரவிக்கப்பட வேண்டிய ஒரு பாரம்பரிய தொழிலாகும்.

தமிழ்நாட்டில் கரூர், சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் மற்றும் ஆகிய மாவட்டங்கள் கைத்தறி துணிகள் உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கிறது. கைத்தறி உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக இருப்பதால், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தத்துறை நேரடி தொடர்பை கொண்டள்ளது. 2023-2024 நிதியாண்டில், உலக சந்தை ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடந்து முதலிடத்தில் உள்ளது. இந்த சிறப்பு

கைத்தறி கண்காட்சியில் கரூர் சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சாதா பெட்ஷீட், ஜக்காடு பெட்ஷீட், துண்டு, தலையணை உறை. காட்டன் புடவைகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த கைத்தறி இரகங்கள் குறிப்பாக திண்டுக்கல் சரக ஆர்ட் சில்க் சேலைகள். காட்டன் சேலைகள். திருப்பூர் சரசு காட்டன் சேலைகள், துண்டு இரகங்கள் மற்றும் திருச்சி சரக காட்டன் சேலைகள் ஆகியவை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே நாம் அனைவரும் கைத்தறி ரகங்களை அதிக அளவில் பயன்படுத்தி கைத்தறி நெசவாளர்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும். மேலும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் கைத்தறி துணி இரங்களை அதிக அளவில் வாங்கிபயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு இரத்த அழுத்தம், கண் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, நுரையீரல் சிகிச்சைகள், சர்க்கரை நோய் பரிசோதனை போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.12.50 இலட்சத்திற்கான கடன் அனுமதி ஆணைகளையும். 4 பயனாளிகளுக்கு சிறிய கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் தறிக்கூட கட்டுமான பணிகளுக்கு ரூ.2.40 இலட்சம் மதிப்பிலான அனுமதி ஆணைகளையும், 3 கைத்தறி நெசவாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியத் திட்ட அனுமதி ஆணைகளையும், 1 பயனாளிக்கு குடும்ப ஓய்வூதியத்திட்ட அனுமதி ஆணையையும் என 23 பயனாளிகளுக்கு ரூ.14.90 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்.

வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு கைத்தறி இரகங்கள் குறித்த வடிவமைப்பு போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயமும், இரண்டு மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகயையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குநர் சரவணன், துணை இயக்குநர்(காசநோய்) சரவணன் மற்றும் வட்டாச்சியர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!