கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதைத்தொடர்ந்து பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் நாமக்கலில் சுமதி & கோ என்ற நிறுவனத்தையும், பரமத்தி வேலூரில் சுமதி & கோ மற்றும் சுமதி டிரேடர்ஸ் என்ற பெயரில் எனது மனைவி மற்றும் உறவினர்களின் பெயரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகின்றேன். எனக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.சு மாவட்ட கழக செயலாளர் M.R. விஜயபாஸ்கர் என்பவர் அவரது தம்பியான சேகர் என்பவர் மூலமாக அறிமுகமாகி எங்களுக்குள் பல வருடங்களாக பணம் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு இருந்து வந்தது.
M.R. விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபொழுது அவரது உத்தாவின் பேரில் அவருடைய பினாமிகள் மூலம் எடுக்கப்பட்ட அரசு காண்ட்ராக்ட்களுக்கு எலக்ட்ரிக்கல் மெட்டீரியல் நிறைய அனுப்பினேன். அவர் அமைச்சராக இருந்தபொழுது அவரது குடும்ப உறுப்பினர்கள் Rainbow dyers, Rainbow Bluemetals, Rainbow Infratech, Ariyur Sellandiamman Transports கோடி ரூபாயை வங்கி கணக்கிலும் மற்றும் அவருக்கும் அவரது தம்பி சேகருக்கும் நேரடியாக பணமாகவும் 10 கோடி ரூபாய் வட்டிக்கு கடனாக கொடுத்து இருந்தேன்.
மேற்படி கடனாக கொடுக்கப்பட்ட தொகைக்கான மாத வட்டி ரூ.15,00,000 த்தை கடந்த 2023-ம் வருடம் ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் தராமல் இருந்து வந்ததால் அவர்களிடம் 2024-ம் வருடம் ஜனவரி மாதத்தில் கொடுத்தபணத்தை வட்டியுடன் சேர்த்து கண்டிப்பாக திரும்ப கொடுக்க வேண்டுமென்று கரூரில் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது M.R. விஜயபாஸ்கர் என்னை அவதூறாக திட்டி பணம் தரமுடியாது என்று கெட்ட வார்த்தையால் திட்டி அனுப்பி விட்டார்.
மேற்படி சம்பவத்திற்கு பின்னா் ஒரு வாரம் கழித்து என்னை கரூர் உத்தமி பொன்னுச்சாமி திருமண மண்டபம் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு வரச்சொன்ன M.R.விஜயபாஸ்கர் அவருக்கு தறி போட என்னுடைய குன்னம்பட்டி, மற்றும் தோரணக்கல் பட்டியில் உள்ள சுமார் 100 கோடி ரூபாய் மார்க்கெட் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அவர் சொல்லும் நான்கு நபர்களுக்கு எழுதித்தரும்படி மிரட்டினார். நான் எதற்காக உங்களுக்கு எழுதித்தர வேண்டும்? தர முடியாது நான் கொடுத்த பணத்தை வட்டியுடன் கொடுத்து விடுங்கள் என்று சொன்னவுடன் ஏண்டா பரதேசி நாயே, நான் அமைச்சராக இருந்தபொழுது என் செல்வாக்கை பயன்படுத்தி உன் வியாபாரத்தில் கொள்ளை லாபம் அடித்து வாங்கிய சொத்துகள் தானடா அவைகள் அவற்றை எழுதிக்கொடுக்கச் சொன்னால் முடியாது என்கிறாயா என்று சொல்லி என்னை கன்னத்தில் அடித்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
பின்னர் சொத்துகளை எனது சகலை மகன் பிரவீன் பேரிலாவது மாற்றித்தா நான் போடும் Looms தறியில் உன்னையும் பங்குதாரராக சேர்த்துக் கொள்கின்றேன் என்று ஆசை வார்த்தைக் கூறினார். நான் அதற்கும் முடியாது என்று சொன்னவுடன் அங்கிருந்த அடையானம் தெரிந்த, பெயர் தெரியாத அவரது குடும்ப நபர்கள் மற்றும் அங்கிருந்த அடியாட்கள் என்னை அடித்தும், எட்டி உதைத்தும் கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து தரையில் உட்கார வைத்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த எனது சகலை மகன் பிரவீன் எதற்காக சித்தப்பா பெரிய இடத்தில் பகைத்துக் கொள்கிறீர்கள் என்று சொல்லி அவர்களிடம் தனியாக சென்று ஏதோ பேசி என்னை பரமத்தி வேலூருக்கு அழைத்து வந்து விட்டார்.
மேற்படி சம்பவத்திற்கு பிறகு சில நாட்கள் கழித்து உயிருக்கு பயந்து
அச்சத்துடனே வாழ்ந்து வந்த சமயத்தில்,பிரவீன் சித்தப்பா உங்கள் பெயரில்
சொத்து இருக்கும் வரை உங்களை நிம்மதியாக M.R.விஜயபாஸ்கர் மற்றும் அவரது
தம்பி சேகர் வாழ விடமாட்டார்கள். அவர்கள் மிகவும் ஆள் பலம், அரசியல் பலம்
உள்ளவர்கள் அதனால் சொத்தை உங்களது மகள் சோபனா பெயரில்
மாற்றிவிடலாம் என்று சொல்லி பலவந்தமாக கட்டாயப்படுத்தியதில் கடந்த 8-2-2024 அன்று எனது மகள் சோபனா பெயரில் தான செட்டில்மெண்ட் எழுதிவைத்தேன்.
பின்னிட்டும் எனக்கு சொத்து விசயத்தில் சந்தேகம் இருந்ததால் நான் அசல் செட்டில்மெண்ட் பத்திரங்களை எனது அத்தை மகள் சுமதியிடம் ஒப்படைப்பு செய்து எனது மகளின் பெயரில் ரூ.10 லட்சம் கடனாக பெற்றேன்
பின்னர் தான் M.R.விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் மற்றும் பிரவீனும், கூட்டாக சேர்ந்து என்னுடைய சொத்துக்களை அபகரிப்பு செய்ய திட்டமிட்டு என்னை ஏமாற்றி எனது சொத்துக்களை எனது மகளின் பெயருக்கு தானச் செட்டில்மெண்ட் எழுத வைத்து எனக்கு நம்பிக்கைத்துரோகம் செய்துள்ளனர் என்று தெரிந்துகொண்டேன்.
கடந்த 27-02-2024 அன்று எனது இல்லத்திற்கு வாங்கல் காட்டூருக்கு M.R.விஜயபாஸ்கர் உடன் பிரவீன் மற்றும் அடியாட்கள் மதியம் வந்த பொழுது நானும் அப்பாவும் வீட்டில் இருந்தோம். என்னை அங்கு வந்த எம் ஆர் விஜய பாஸ்கரின் ஆட்கள் வீட்டின் பின்னால் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று எனது மகள் சோபனா பெயரில் எழுதப்பட்ட செட்டில்மெண்ட் பத்திரங்களின் அசல் ஆவணங்கள் எங்கே உள்ளது என்று கேட்டார்கள் நான் சொல்ல முடியாது என்று சொன்னவுடன் என்னை அடித்து கேட்டார்கள். பின்னர் வாங்கல் வீட்டை முழுமையாக சோதனை செய்து விட்டு அவர்கள் வந்த TN 88 L 3435 (Honda Truezon) காரில் கடத்திக் கொண்டு கரூரில் உள்ள எனது அண்ணன் மகேஷ்வரன் வீட்டிற்கு கொண்டு சென்று அங்கேயும் என்னை அடித்து துன்புறுத்தி பத்திரம் எதாவது இருக்கிறதா என்று சோதனை செய்தார்கள் அங்கேயும் பத்திரம் இல்லை என்று தெரிந்தவுடன் மீண்டும் என்னை வாங்கல் வீட்டிற்கு அழைத்து வந்து என்னைப் பிரவீனும் அவருடன் வந்த அடியாட்களும் பலவந்தமாக தாக்கி இனி எந்த காலத்திலும் வேலூர் எலக்ட்ரிக்கல் கடைக்கோ, வீட்டிற்கோ வரக்கூடாது என்றும் சொல்லி எனக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து எனது பெயரில் உள்ள மற்றச் சொத்துக்களையும் பிரவீன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என M.R.விஜயபாஸ்கர் கொலைமிரட்டல் விடுத்தார். மேற்படி சம்பவத்திற்கு பிறகு உயிருக்கு பயந்து நான் எனது அப்பாவுடன்
வாங்கல் வீட்டிலேயே தங்கிவிட்டேன்.
பின்னர் 04-04-2024 ஆம் தேதியன்று நான்
வாங்கல் வீட்டில் மதியம் தனியாக இருந்த போது M.R. விஜயபாஸ்கரின் தூண்டுதலின்
பெயரில் அங்கு அடியாட்களுடன் வந்த பிரவின் எனது மகளின் பெயரில் நான்
எழுதிவைத்த செட்டில்மெண்ட் பத்திரங்களினுடைய அசல் ஆவணங்களைக் கேட்டும்
. M.R. விஜயபாஸ்கர், அவரது குடும்பத்தார் மற்றும் என் மீதும்
லஞ்ச ஒழிப்பு துறையினரால் போடப்பட்ட வழக்கை முழுமையாக என்னை ஏற்றுக்
கொள்ளச்செய்யும் படி பிரவீன் மற்றும் அவருடன் வந்த 10 அடையாளம் தெரிந்த,பெயர் தெரியாத நபர்கள் கருப்பு ஏர் ஓஸ் மூலம் முதுகில் பலவந்தமாக அடித்து எனக்கு ஏதோ குடிக்கச் சொல்லி வாயில் ஊற்றினார்கள். பின்னர் அங்கிருந்து அனைவரும் யாரோ வருவதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். அவர்கள் அடித்ததில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகள் இன்னும் முழுமையாக ஆறாமல் என் முதுகில் உள்ளது.
அதற்குப் பின்னர் நான் அங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்று பயந்து எனது நண்பர் மூலமாக கரூர் ஹேமலா ஹோட்டலில் ரூம் பதிவு செய்து அறை எண்.206-ல் தங்கினேன். பின்னர் அன்றைய தினம் நடு இரவில் மயக்கம் வருவது போல் இருந்ததால் எனது அண்ணன் மகேஷ்வரனை அலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் மூலம் கரூர் செந்தில் எமர்ஜென்சி கேர் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். மேற்படி மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுது நான் சுய நினைவை இழந்துவிட்டேன். பின்னர் நான் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உடனடியாக கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் 05- 04-2024ம் தேதியில் சேர்க்கப்பட்டேன். பிறகு மருத்துவமனையிலிருந்து 10- 04-2024 ைடிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தவுடன் மீண்டும் உடல் நிலை மோசமானதால் 11-04-2024 முதல் கரூர் செந்தில் எமர்ஜென்சி கேர் மருத்துவமனையில் மீண்டும் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு 20-04-2024 வரை சிகிச்சைப்பெற்றேன்.
இந்த சமயத்தில் நான் மருத்துவமனையில் இருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பிரவீன், M.R. விஜயபாஸ்கர் மற்றும் அவருடன் இருக்கும் பலரும் சேர்ந்து எனது மகள் சோபனா மற்றும் மனைவி சசிகலா ஆகியோர்களை மிரட்டி நான் எனது மகள் சோபனாவுக்கு எழுதிக்கொடுத்த தோரணக்கல் பட்டி (மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆவண எண். 884/2024) மற்றும் காக்காவடி கிராமம். குன்னம்பட்டியிலுள்ள (வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகம் ஆவண எண்கள்.556/2024 மற்றும் 557/2024) ஆகிய சொத்துக்களை எனது மகள் சோபனாவிடமிருந்து 06-04-2024 ஆம் தேதி 1. காஞ்சிபும் மாவட்டம் தேவராஜ் மகன் ரகு 2. ஈரோடு மாவட்டம் முத்துச்சாமி மகன் சித்தார்த்தன் 3. கரூர் மாவட்டம் நாச்சியப்பன் மகன் மாரப்பன் 4. சுரூர் மாவட்டம் செல்லமுத்து மகன் செல்வராஜ் ஆகியோர்களின் பெயரில் மோசடியாக ஒரு கிரைய பத்திரம் மேலக்கரூர் சார்பதிவாளர்
அலுவலகத்தில் (ஆவண எண்.P/38/2024) பதிவு செய்யப்பட்டுள்ளது.மேற்படி எனது மகள் சோபனாவுக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட செட்டில்மெண்ட் பத்திரத்தின் என்வசம் அசல் இருந்தபொழுது அந்த ஆவணங்கள் தொலைந்துவிட்டதாகவும் அந்த ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்டதாக பொய்யான Not Traceable Certificate யை கரூர், மேலக்கரூர் சார்பதிவாளர் வசம் கொடுத்து (ஆவண எண்.P/38/2024) Pending பத்திரம் 10-05-2024 அன்று Regular பத்திரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி விஷயத்தை அறிந்த நான் உடனடியாக 11-05-2024 -ம் தேதியன்று கரூர், மேலக்கருர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அசல் ஆவணங்கள் என்னிடம் உள்ளது போலியான Not Traceable Certificate யை கொடுத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து அசல் ஆவணங்களை கிரையம் பெற்ற நபர்களிடம் ஒப்படைக்க கூடாது என்று சொல்லி மனு கொடுத்தேன்.
மேற்படி M.R விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் மற்றும் பிரவீன் அவருடன் வந்த அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத 10 நபர்கள் என்னை கடத்தி சென்று அடித்து துன்புறுத்தி விஷம் கொடுத்து மற்றும் வேலூர் வீட்டிற்கோ,கடைக்கோ வரக்கூடாது என்று கொலைமிரட்டல் விடுத்தும் பின்னர் என்னுடைய வங்கித் தொடர்பான காசோலைகள் மற்றும் என்னை அடித்து மயக்கமடையச் செய்த பின்னர் வெற்று ஆவணங்களில் என்னுடைய கை ரேகையை பதிவு செய்து பல மோசடியான செயல்களை எனக்கு எதிராக செய்து வருவதாக தெரியவருகிறது.
இந்த . சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அரசியல் பலம் மற்றும் பண பலம் படைத்தவர்களாக இருந்ததால் பயத்தில் நான் இதுவரை புகார் அளிக்காமல்
தற்சமயம் புகார் அளிக்கிறேன். எனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம்
என்பதை தெரிவித்து கொள்கிறேன். போலீசார் அந்த நபர்கள் மீது தக்க
நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும், என்னையும் எனது குடும்பத்தாரையும்
ஏமாற்றி சுமார் 100 கோடி மதிப்புள்ள சொத்தை மோசடியாக நில அபகரிப்பு
செய்துகொண்ட சொத்தை மீட்டு தந்து எனக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் படி
கேட்டுக்கொள்கிறேன் .
இவ்வாறு அவர் கூறினார். இதையே புகாராகவும் கொடுத்ததாக அவர் கூறினார்.