Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

தஞ்சாவூரிலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த அருமைகாரன் புதூருக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. கரூர் – வெள்ளியணை சாலையிலிருந்து இறங்கி அருமைகாரன் புதூரை நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது அங்கு இருந்த மின்சார கம்பியில் உரசி தீ பிடித்துள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் போட்ட சத்தத்தால் லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு உயிர் தப்பினார். இந்நிலையில் தீ மளமளவென பரவி லாரி கொழுந்து விட்டு எரிந்தது. இது தொடர்பாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு துறையினர் வருவதற்குள் லாரி முழுவதுமாக எரிந்து நாசமாயின. இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!