Skip to content
Home » மக்களை தேடி மருத்துவம்…. 6லட்சம் பேர் பயன்…. கரூர் கலெக்டர் தகவல்…

மக்களை தேடி மருத்துவம்…. 6லட்சம் பேர் பயன்…. கரூர் கலெக்டர் தகவல்…

கரூர் மாவட்டம் உப்பிட மங்கலம் பேரூராட்சி லெட்சுமணபட்டி. மேலபாளையம் ஊராட்சி வடக்குபாளையம் கிராமத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்…

தமிழக அசின் முதன்மை திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 5.8.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. தொற்றா நோய்களினால் ஏற்படும் நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக மக்களைத் தேடி மருத்துவம் வடிவமைக்கப்பட்டு களபணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே பின்வரும் சுகாதார சேவைகள் வழங்கப்படுகிறது – உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல்: நோய் ஆதரவு சேவைகள்: இயன்முறை மருத்துவ சேவைகள்; சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல்; பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து  இத்திட்டம் துவங்கப்பட்டு 23.2.2023 வரை உயர் இரத்த அழுத்த நோய் சிகிச்சை மருந்துகளை பெற்றவர்கள் 39,823 சேவைகளையும் தொடர் சேவைகள் 216,919 பயனாளிகளும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருத்துகளை பெற்றவர்கள் 24,600 சேவைகளையும் தொடர் சேவைகள் 1.71.331 பயனாளிகளும். உயர் இரத்த அழுத்த மற்றும் நீரிழிவுநோய் சிகிச்சைக்கான மருத்துகளை பெற்றவர்கள் 15,623 சேவைகளையும் தொடர் சேவைகள் 1.21.482 பயனாளிகளும், நோய் ஆதரவு சிகிச்சை பெற்றவர்கள் 5,863 சேவைகளையும் தொடர் சேவைகள் 5,983 பயனாளிகளும், இயன்முறை சிகிச்சை சேவைகள் பெற்றவர் 8,486 முதன் முறை சேவைகளையும், தொடர் சேவைகள் 11.347 பயனாளிகளும், CAPD 2 பயனாளிகள் முதன் முறை சேவைகளையும், 2 தொடர் சேவைகளும் மொத்தம் 95,397 பயனாளிகள் முதன் முறை சேவைகளையும், 5,27,064 பயனாளிகள் தொடர் சேவைகளும் பெற்று பயனடைந்துள்ளனர்.ஆக மொத்தம் 6,22,461 பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். என பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில்
துணை இயக்குநர்(சுகாதார பணிகள்).சந்தோஷ்குமார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!