கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரியில் தண்ணீர் திறக்கப்பட்டது மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காவேரி கரையோர மக்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் காவிரியில் குளிக்கவும் துணி துவைக்கவோ ஆடு மாடுகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என ஆட்டிற்கு செல்லும் வழியில் பதாகைகள் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் நீர் வந்த நிலையில் தற்போது
மாயனூர் தடுப்பணையில் இன்று காலை நிலவரப்படி 4,000 கன அடி நீர் கடந்து நீர் செல்கிறது.
மேலும் நீர் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் மாயனூர் காவிரி ஆற்றிற்கு வந்த நீரை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பூக்கள் தூவி காவேரி தாயை வணங்கி வரவேற்றனர்.