கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் கம்பம் போடும் நிகழ்வுடன் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஊஞ்சல் சேவை நேற்று நடைபெற்றது. மாரியம்மன் மற்றும் மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மாரியம்மனுக்கும், மாவடி ராமசுவாமிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு ஆலய மண்டபத்தில் ஊஞ்சலில் சுவாமிகளை அமர வைத்தனர். அதை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க ஆலய மண்டபத்தில் ஊஞ்சல் சேவை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஸ்ரீ மாரியம்மன் மற்றும் மாவுடி ராமசுவாமி மனம் உருகி வழிபட்டு சென்றனர் .