கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றனர்.
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கரூர் மாவட்டம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், ஆகிய வட்டங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆட்சியரிடம் பிரபு சங்கரிடம் மனு ஒன்றை அளித்தினார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது கரூர் மாவட்டத்தில் காவிரி கரையை ஒட்டியுள்ள குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாட்டு வண்டி தொழிலாளர் உள்ளனர் இவர்கள் மாட்டுவண்டி மூலம் காவிரி ஆற்றில் மணல் அள்ளி உள்ளூர் தேவைகளுக்கும் மற்றும் அரசு கட்டுமான பணிகளுக்கும் அளிப்பதாகவும், இதனால் மணல் தேவை பூர்த்தி செய்வதோடு தங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மாட்டு வண்டி மூலம் மணல் அல்ல அரசு தடை விதித்துள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய வட்டங்களில் உள்ள மாட்டுவண்டி. தொழிலாளர்கள் காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அல்ல அனுமதி வழங்குமாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.