கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 40- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு வழங்கினர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் பி.அணைப்பாளையம் பகுதியில் உள்ள நிமந்தப்பட்டியில் சர்வே எண் 394-ல் உள்ள நிலத்தில் மதுரவீரன் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது இங்கு ஏராளமான மக்கள் மூன்று தலைமுறையாக வணங்கி வருகின்றனர்.
தற்போது அந்த மதுரவீரன் சுவாமி கோவிலை புதிதாக கட்டுவதற்காக கடந்த 09.02.2024 ஆம் தேதி ஊர் பொதுமக்கள் மற்றும் அனைவரும் ஒன்று கூடி முடிவு செய்யப்பட்டது அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தர்மகத்தாகள் மகன்கள் இது எங்கு நிலம் எனக் கூறி இங்கு கோவில் கட்டக்கூடாது என்று கூறி தடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலகம் சென்று விசாரித்த போது இது கோவில் நிலத்தில் அமைந்துள்ளது என்று கூறியுள்ளனர் 1986-ம் ஆண்டு அப்போதைய இருந்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியுடன் மதுரவீரன் கோவில் தர்மகர்த்தா என்பதை அழித்துவிட்டு தர்மகத்தாக்கள் சீரங்கன் மகன்கள் பிச்சைமுத்து,புங்கான், கிட்டான் என்று பட்டாவின் பெயர்களை மாற்றி பெயர் மோசடி செய்துள்ளனர்.
150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மதுரை வீரன் சுவாமி கும்பிட்டு வருவதால் நிலத்தை மீட்டு மோசடியாக பெற்ற பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.