தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தேசிய/மாநில/மாவட்ட அளவில் “இளைஞர் திருவிழா 2023-24′” மூலம் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாரத்தான் ஒட்டம் , நடத்தப்படு வருகிறது. இதனையொட்டி, கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மாரத்தான்
போட்டி இன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியானது 5 கிமீ தொலைவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி காளியப்பனூர், தாந்தோன்றிமலை, பாரதிதாசன் நகர் வழியாக சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்.