கரூர் மாநகராட்சிக்குட்பட்டதலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய மோடி அரசின் அமலாக்கத்துறை ஆய்வுவையொட்டி மணல் குவாரிகள் நிறுத்தப்பட்ட நிலையில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சுப்பிரமணியன் கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கால்நடை பராமரிக்க கூட பணம் இல்லாமல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நியாயமற்ற முறையில் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த முறையில்லாமல் அரசே நேரடியாக மாட்டு வண்டிகளுக்கு மட்டும் மணல் விநியோகம் என்ற அறிவிப்பை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இரண்டு மணல் குவாரிகள் மாட்டு வண்டிக்கு மட்டுமே நேரடியாக அனுமதிப்பது என்று அரசு முடிவை அமலாக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.