கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மலையாண்டிபட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டு விழா நடத்தப்பட்டன. தாசி பொம்ம நாயக்கர் மந்தையில் 14 மந்தைகளை சேர்ந்த திருவிழாவில் கலந்து கொள்ள வந்த மந்தையர்களுக்கு வரவேற்பும், மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது, மாலை தாண்டும் விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களிலும் இருந்து 10 மந்தைக்காரர்கள் கலந்து கொண்டனர், மந்தைக்கு சொந்தமான
200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாலை தாண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வளர்க்கப்படும் 400 மேற்பட்ட காளைகளும் கலந்து கொண்டன, கலந்து கொண்ட காளைகளில் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் முதல் பரிசு மஞ்சள் தூள் எலுமிச்சை கனி பரிசுகளும் வழங்கப்பட்டது, நாயக்கர் சமூகத்தின் பாரம்பரிய கலை விளையாட்டான தேவராட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவை கண்டு மகிழ்ந்தனர்.