Skip to content

கரூர் அருகே லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால் காற்றாலை அமைப்பதற்கான விசிறிகள் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை லாரிகள் மூலம்  24 மணி நேரமும் செல்கிறது.

இன்று காலை திருநெல்வேலி மாவட்டத்திற்கு காற்றாலை அமைப்பதற்காக விசிறி இறக்கைகளை ஏற்றி சென்று கொண்டிருந்தபோது கரூர் மாவட்டம் பெத்தாங்கோட்டை பிரிவு பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாழ்வான சாலையில் லாரி கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தால்    போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. இரண்டு கிரேன் வாகனம் உதவியுடன் விசிறிகள் மற்றும் லாரிகளை மீட்கும் பணியில் காற்றாலை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த விபத்து காரணமாக  போலீசார்  4 வழிச்சாலையை ஒருவழி பாதையாக மாற்றியும், ஒரு சில வாகனத்தை மாற்று வழியில் திருப்பியும்  விட்டுள்ளனர்.

error: Content is protected !!