கரூர் பேருந்து நிலையம் அருகில் தனியார் (P.L.A) ஹோட்டல் விடுதியில் மின்தடை ஏற்பட்டதால் லிஃப்டில் (பாலசுப்ரமணி வயது 37) என்ற நபர் சிக்கிக் கொண்டதாக கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கரூர் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் தனியார் விடுதியில் மூன்று தளங்கள் கொண்ட லிஃப்டில் முதல் தளத்தில் சிக்கிக்கொண்ட கரூர் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பாலசுப்ரமணியை பத்திரமாக மீட்டு முதலுதவி செய்து, அனுப்பி வைத்தனர். மின்சார தடை ஏற்பட்டால் அவசர தேவைக்காக பயன்படுத்தும் வகையில் அந்த விடுதியில் அமைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் வசதியும் பழுதாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.