கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55).
முட்டை வியாபாரம் செய்து வருகிறார். செல்வி ஒரு மாதத்திற்கு முன் வேடசந்தூர் பகுதியில் சந்தையில் வியாபாரத்திற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் மீன் வியாபாரி ஒருவர் செல்வியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, இன்று செல்வி, தனது வீட்டு அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காரை 11 மணிக்க அவர் டவரில் ஏறினார். 12. 30 மணி வரை அவர் இறங்கவில்லை. எனவே தாந்தோணிமலை போலீசார் மற்றும் செல்வியின் மகன், மகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் போலீசார் கொண்டு வந்த ஒலிபெருக்கியில் கீழே இறங்கும்படி சொல்லியும் தொடர்ந்து கீழே இறங்கி வர மறுத்து செல்வி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அங்கு மக்கள் பெருமளவில் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.