கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாள் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். நவராத்திரி என்றாலே பல்வேறு ஆலயங்களில் ஒன்பது நாட்கள் சிறப்பு விசேஷம் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கரூர் மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாள் முன்னிட்டு வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமிக்கு பல்வேறு
பொருட்களால் அபிஷேக நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டப வாசலில் சுவாமிக்கு சிறப்பு வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் காட்சிக்காக சுவாமி அருள் பாலித்தார்.
பின்னர் சுவாமிக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் துளசியால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மேட்டு தெரு அபய பிரதன ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி இரண்டாம் நாள் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.