கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கடந்த 01-03-21 ம் தேதி சத்யா என்ற பெண் நடந்து செல்லும் போது அவரது கணவர் சதீஷ்குமார் என்பவர் கெட்ட வார்த்தையால் பேசி அரிவாளால் கை, முகம், தலை உள்ளிட்ட பகுதியில் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தோகைமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கானது கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விசாரணைக்காக தோகைமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன், ஆய்வாளர் காசி பாண்டியன்
ஆகிய இருவரையும் 02-11-23 ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டிருந்தார்.
அதிகாரிகள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து எஸ்.ஐ. இன்ஸ்பெக்டர் ஆகிய இருவருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து மகிளா நீதிமன்ற நீதிபதி நசிமா பானு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.