கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் டெக்ஸ் சிட்டி கூடை பந்து கழகம் மற்றும்கரூர் மாவட்ட கூடை பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 X 3 கூடைப்பது போட்டி கடந்த இரண்டாம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் கோவை கரூர் திண்டுக்கல் சேலம் மதுரை ஈரோடு நாமக்கல் திருச்சிஅறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டனர் இந்த போட்டி முழுவதும் லீக் முறையில் நடைபெறுகிறது கடைசி நான்கு போட்டிகள் மட்டும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில்திண்டுக்கல் bbc அணியும் கோவை வெஸ்டன் போலீஸ் அணிமோதியதில் 15க்கு 8 என்ற புள்ளி கணக்கில் திண்டுக்கல் பிபிசி அணி சேம்பியன் பட்டத்தை போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சுழல் கோப்பையும் கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.