கரூர் மாவட்டம், வடவம்பாடியை அடுத்த முத்தம்பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் கிராமத்தை ஒட்டி 100 மீட்டர் தூரத்தில் தனியார் இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை சுற்றி விவசாய நிலங்கள் அதிகளவில் இருப்பதாகவும், மாடு மாலை தாண்டும் நிகழ்வு அங்கு நடைபெறுவதால் அவற்றிற்கு இடையூராக இருக்கும் என்பதால் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.