கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை கோவிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் திருத்தேர் மற்றும் தெப்பத்தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். தென் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோவிலில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேரோட்டத்தை முன்னிட்டு இன்று கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.
கோவில் வளாகத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சக்கரத்தாழ்வார் முன்பு கொடி ஏற்றப்பட்டது. கொடி
கம்பத்திற்கு கோரைப் புல், வண்ன மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கொடிகம்பத்தில் உள்ள கருடாழ்வாருக்கும், கொடி மரத்திற்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருத்தேர் திருவிழா வரும் 24ம் தேதியும், தெப்பத்தேர் திருவிழா வரும் 26ம் தேதியும் நடைபெறவுள்ளது.