தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமணசுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர், முடி காணிக்கை செலுத்தி விட்டும், விரதத்தை கடைபிடிக்கும்
பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்திற்கு கரூர் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், மக்கள் கூட்டம் அதிகளவு இருப்பதால் பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்தும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.