கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாநகராட்சி மையப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஆகிய ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்
ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
அப்போது நடராஜருக்கு, பால்,தயிர்,இளநீர், மஞ்சள்,பன்னீர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடராஜர் வடிவில் சிவபெருமான் காலை தூக்கி நடனமாடுவதை போல், சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார். அப்போது கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி,நட்சத்திர ஆரத்தி, மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் நடராஜர், அம்பாளுடன் சேர்ந்து சப்பரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தார்.warwa