கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சிவாலயங்களில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நவராத்திரி ஐந்தாம் நாளை முன்னிட்டு அம்பிகைக்கு ஸ்ரீ லட்சுமி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு
காட்சியளித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு அம்பிகைக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து காட்சியளித்தார். சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி ஐந்தாம் நாள் சிறப்பு அலங்காரத்திற்கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சிறுமிகளின் வீணை இசை கச்சேரி நடைபெற்றது.இதில் அம்மன் முருகன் விநாயகர் என பல்வேறு சுவாமிகளின் பக்தி பாடல்களை வீணைகளின் மூலமாக இசைத்து காட்டினர் இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.