Skip to content
Home » கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள் இடையே வாக்குவாதம்..

  • by Senthil

கரூர் மாநகரின் மையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜை நடைபெறுவது வழக்கம். இதனை பக்தர்கள் தரிசித்த பிறகு கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பள்ளியறை பூஜையின் போது தீபாரதனைக்கு பிறகு பக்தர்கள் தீபாரதனை தட்டை எடுத்துச் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் முழுமையாக காண்பிக்கப்படுவதற்கு முன்பாகவே பள்ளியறை நுழைவு வாயிலில் திரை சீலையால் அர்ச்சகர்கள் மூடியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவனடியார்கள், பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பிறகு திரைச் சீலையை போடலாமே என

கூறியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதமும், அதனை தொடர்ந்து தள்ளு, முள்ளும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் பள்ளியறை கதவுகளை பூட்டி விட்டுச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் கோவில் செயல் அலுவலரிடம் தனித்தனியாக புகார் அளித்துள்ள நிலையில், அவர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!