கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு அக்டோபர் 22-ந்தேதி எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணியும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு
ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். இதில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் சிவனடியார்கள் பலர் கலந்து கொண்டனர்.