Skip to content

கரூரில் கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்… விவசாயிகளுக்கு பரிசு…

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே எலவனூர் அரசு கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நஞ்சை காளகுறிச்சியில் நடைபெற்றது. இம்முகாமில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள் வழங்குவது குறித்து கால்நடை மருத்துவர்கள் விவசாயிகளிடம் கூறினார்.

முகாமில் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் கூறும்போது….  பெரும்பாலும் கால்நடை வளர்ப்பதையே இப்பகுதி விவசாய தொழிலாக செய்து வருகின்றனர். ஈ, கொசு போன்ற கடிக்கும் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோய்களுக்கு பாதிக்கப்பட்ட மாடுகளின் காய்ச்சல் உடல் முழுவதும் சிறிய கட்டிகள் கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும் நோய் பரவும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே நோய் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த முகாமில் வெள்ளாடு 292, செம்மறி ஆடுகள் 213 க்கு குடல் புழு நீக்கவும், மாடுகள் 247, எருமைகள் 34, கோழி 258 என மொத்தம் 1044 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமிற்கு ஏலவனூர் கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேந்திரன், பால் உற்பத்தியாளர் நிர்வாகி காளியப்பன், விவசாயிகள் சங்க முக்கிய நிர்வாகி பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு கால்நடை பராமரிப்பு துறை உதவி ஒன்றிய கவுன்சிலர் நல்லசாமி கலந்துகொண்டு முகாமில் தொடங்கி வைத்து முகாமில் சிறந்த கலப்பின கிடேரி கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!