கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கடையடைப்பு, திருச்சி – பாளையம் சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியல், மரங்கள் மற்றும் சிமெண்ட் தூண்களை சாலையில் போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கோட்டாட்சியர் புஷ்பா தேவி சரிவர விசாரணை மேற்கொள்ளாமல்
ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும், அவரது வாகனம் மோதி 17 வயது சிறுமி பவதாரணி படுகாயம் அடைந்தததை கண்டுகொள்ளாமல் சென்றதை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.