கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் செயல்திட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, திமுக முக்கிய பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில்
1. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 1 கோடியே 48 லட்சம் மகளிருக்கும் விரிவுபடுத்தி ஏழை எளிய மக்களின் பாதுகாவலராக திகழும் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்தனர்.
2. தமிழக மாணவ மாணவிகள் வலிமையோடும், ஆரோக்கியமாகவும் கல்வி பயின்றிட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளும் விரிவுபடுத்திய கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்தனர்.
3. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்து வரும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமலும், அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளிக்காமலும் மாற்றாந்தாய் மனபோக்குடன் நடந்து கொள்ளும் பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து நாளை 27.07.2024 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கரூர் ஜவகர் பஜார் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக சார்பு அணி நிர்வாகிகள், வட்ட, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கழக மூத்த முன்னோடிகளும் கலந்து கொள்ள வேண்டுமென இக்கூட்டத்தின் முடிவெடுக்கப்பட்டது.