கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட LNS திருக்காம்புலியூரில் அமைந்துள்ள ஜெய சக்திவிநாயகர் கோவில் சுமார் 60 ஆண்டு காலமாக அமைந்துள்ள அரச மரத்துடன் கூடிய கோவில்உள்ளது.
இங்கு கோவிலை புதிதாக கட்டுவது என்று முடிவு செய்து ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் சார்பில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர்.
கட்டுமான பணிகள் நிறைவடைந்ததைடுத்து இன்று கும்பாபிஷேக விழாவிற்கு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக புனித நீர் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.புனித நீரை அரசமரத்துடன் கூடிய விநாயகருக்கு சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை
விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி பூஜை, லட்ச்சார்ஜனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட இரண்டு காலையாக வேள்வி பூஜைகளை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் காலை யாக பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் அரச மரத்திற்கு சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரினை அரச மரத்திற்கு உற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ரத்தினம் பிள்ளை புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.