நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று நடந்த தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் இந்நிலையில் கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைவீதியில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெக்ஸ்டைல் கமிட்டி இணை இயக்குனர் கௌரி சங்கர்
தலைமையில் தர நிர்ணய அலுவலர் பாலாஜி மற்றும் மத்திய அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மலை வீரியை சுற்றி இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தை விளக்கும் வகையிலான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.