Skip to content
Home » கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

கரூர் பெரிய ஆண்டாங் கோவில் அமராவதி தடுப்பணையில் இன்று காலை நிலவரப்படி 75,751 கன அடி உபரிநீர் தடுப்பணையை கடந்து செல்கிறது. ஆர்ப்பரித்து செல்லும் நீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் நீர்வரத்து அதிகரிப்பால் அமராவதி ஆற்றில் 36,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

மேலும் திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து

வருகிறது. கரூர் மாநகராட்சியை ஒட்டிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு இன்று காலை 6.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 75,751 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அந்த தண்ணீர் முழுவதுமாக அமராவதி ஆற்றில் சென்று திருமுக்கூடலூர் எனும் இடத்தில் காவிரி ஆற்றுடன் கலந்து செல்கிறது.

அமராவதி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீரை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தும் , செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆற்றில் இறங்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *