கரூர் தனியார் கண் மருத்துவமனை சார்பில் மார்ச் 28 இன்று குளுக்கோமா என்னும் கண் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு பேரணி கரூர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து கரூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி கரூர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து கோவை சாலை வழியாக வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கண் மருத்துவமனையில் நிறைவடைந்தது.
விழிப்புணர்வு பேரணியில் கண் அழுத்த நோய், பார்வை நரம்புக்கு சேதம் ஏற்படுத்துவதால் பார்வைய இழப்புக்கு வழிவகுக்கும் மேலும்
கண்ணில் திரவ அழுத்தம் அதிகரிப்பதன் மூலம் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பார்வை இழப்பு நிரந்தரமாகிவிடும் என்பதை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்