ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (70). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மனைவி லட்சுமியுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்க துவங்கினர்.
இந்தநிலையில் தீராத வலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்ட அந்த முதியவர் மன உளைச்சல் காரணமாக தன்னிடம் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தன் மனைவி மற்றும் சக நோயாளிகள் யாரும் கவனிக்காத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்த பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.