கரூர், காந்திகிராமம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் 7 மாடிகளில் அமைந்துள்ள பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மருத்துவக் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
மருத்துவக் கல்லூரியில் தரைத்தளத்தில் இருந்து அடுத்தடுத்த தளங்களுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்பாட்டுக்காக படிக்கட்டு வசதி, லிப்ட் வசதி மற்றும் சாய்வு தள வசதிகள் உள்ளன. குறிப்பாக சாய்வு தள பகுதியை மகப்பேறு
சிகிச்சையில் உள்ள பெண்களும், விபத்து பிரிவில் உள்ள நோயாளிகளும், வயது முதிர்ந்தவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தப் பகுதியில் இரண்டாம் தளத்தில் நோயாளிகள் வசதிக்காக பக்கவாட்டு சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கைப்பிடி கம்பிகள் சமீபத்தில் கீழே விழுந்துள்ளது. மீண்டும் அதை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதால், நோயாளிகளும், வயது முதிர்ந்தவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.