கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஜீவா நகரில் வசிப்பவர் கந்தசாமி. இவரது வீட்டின் மாடிப்படி அருகில் பாம்பு ஒன்று சென்றதாக அருகில் இருந்த பொது மக்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பாம்பு இருக்கும் இடத்தை கண்டறிந்ததுடன், பாம்பு
பிடிக்கும் உபகரணத்தின் உதவியுடன் லாவகமாக பிடித்தனர். பாம்பு பிடிபட்டது முதல் படமெடுத்து ஆடியது. இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்ச்சரியத்துடன் பார்த்தனர். பின்பு, அப்பாம்பை சாக்குப் பையில் போட்டு வனப்பகுதியில் விட தீயணைப்பு துறையினர் எடுத்துச் சென்றனர். பிடிபட்ட பாம்பு சுமார் 6 அடி நீளம் இருக்கும் என்றும், கொடிய விஷத் தன்மை கொண்ட நல்ல பாம்பு என்று சொல்லக் கூடிய நாகபாம்பு வகையை சார்ந்தது என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.