Skip to content
Home » கரூர் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்..

கரூர் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்..

தென் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என தமிழக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின்

w

காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள கோரைப்புல் , வாழை, தென்னை உள்ளிட்ட விவசாய நிலங்களிலும், சரியான முறையில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் வாய்க்காலை தூர்வார படாததால் வாய்க்கால் செல்லும் நீர் வீடுகளுக்குள் வெள்ளம் போல் புகுந்துள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, டி.என்.பி.எல் காகித ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை தடுக்க வேண்டும் என்றும், வாய்க்காலை சரியான முறையில் தூர்வார வேண்டும் என்று அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில்: பாப்புலர் முதலியார் வாய்க்கால் முறையாக தூர்வார படவில்லை என்றும் மாவட்டத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாத காரணத்தினால் தான் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது நேற்று இரவு பெய்த மழை காரணமாக பாம்பு உள்ளிட்ட உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருந்தது.

மேலும் காகித ஆடையில் இருந்து மழைப்பொழிவின்போது அதிக அளவில் வெளியேறும் கழிவு நீரால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *