கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கோவில்களை சீரழிக்கும் அரசை கண்டித்தும், கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு இவற்றின் மையமாக விளங்கும் கோவில்களை நாத்திக சிந்தனை கொண்ட திமுக அரசு தொடர்ந்து சீரழித்து வருவதாகவும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்கள் சிதலமடைந்து ஆயிரக்கணக்கான கோவில்களில் ஒரு கால பூஜையில் கூட நடைபெறவில்லை எனவும், கோவில் நிலங்களில் பேருந்து நிலையம், நீதிமன்ற வளாகம் போன்ற அரசு அலுவலகங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், அரசு நிலத்தில் சிறு கோவில்கள் இருந்தாலும் இடித்து தள்ளப்படுகிறது எனவும் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியை சார்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.