கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பலதத மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. கடவூர் அருகே செம்மநத்த கிராமம் அரசகவுண்டனூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் 100 நாள் வேலைத்திட்டத்தில் தூர்வார்பட்டு இருந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் குளம் நிரம்பி கரை உடைந்தது. இதனால் தண்ணீர் வெளியேறுகிறது. விவசாய குளத்தை சரியான நிலையில் சீரமைக்காததால் தண்ணீர் வீணாகி விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, உடனடியாக குளத்தின் கரையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.