கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட 200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்களாக உயர்த்தியும், விசைத்தறி நெசவாளர்களுக்கான, 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்களாக உயர்த்தியும் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாசிகளுடன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் அண்ணன் ஆர். காந்தியுடன் இணைந்து, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான V. செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட கைத்தறி
நெசவாளுக்கான பொது வசதி மையத்தை கரூர் வேலுசாமி புறத்தில் இன்று துவக்கி வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கரூர் மாவட்டத்தை சார்ந்த தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கைத்தறி நெசவாளர்களுக்கான பொது வசதி மையத்தை கொண்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரு்ர் மாவட்ட மக்கள், கைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.