Skip to content
Home » கரூரில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு …

கரூரில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு …

  • by Authour

கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் தொடக்கப் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 17ஆம்தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தின் 46 பள்ளிகளில் இவ்விழிப்புணர்வு பேரணி 19.04.2023

முதல் 28.04.2023 வரை நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட ஒரு வாகனம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அரசின் நலத்திட்டங்களான எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை, மன்ற செயல்பாடுகள், காலை உணவு, சத்தான சத்துணவுடன் வாரம் ஐந்து முட்டை வழங்குதல், அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக்கல்வி ஆகியவை வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தும் வகையில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளின் அருகில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *