Skip to content
Home » கரூர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள், முன்னாள் பேராசிரியர்கள் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு..

கரூர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள், முன்னாள் பேராசிரியர்கள் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 1999 – 2002 ஆம் கல்வியாண்டில் வரலாற்று துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் சந்திக்கும் நிகழ்வானது (25 ஆண்டுகள்) வெள்ளி விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் முன்னாள் பேராசிரியர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி மரியாதை செய்தனர்.

இதில் கரூர், திருச்சி, கோவை, சென்னை என தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அரசுத் துறைகளில் வட்டாட்சியர்,

அரசு வழக்கறிஞர் போன்ற உயர் அதிகாரிகளாகவும், இந்திய எல்லையில் ராணுவ வீரராக பணியாற்றுபவர்கள் மற்றும் பல்வேறு துறையில் பணியாற்றக்கூடிய 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது 25 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்ற அனுபவத்தை ஒருவருக்கொருவர் நினைவுகூர்ந்தனர்.

மேலும், தாங்கள் பயின்ற வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்த மாணவர்கள், முன்னாள் பேராசிரியர் ஒருவரின் அறிவுரையை ஆவலுடன் கேட்டுக்கொண்டு, கலகலப்பாக உரையாடி மகிழ்ந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *