கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட
அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நள்
கூட்டம் நடைபெற்றது. கடந்த (31.03.2023) அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவவர்கள் மூலம் பதில் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சி கலெக்டர் கூறியதாவது.. பூனம்பட்டி பகுதியில் விவசாயிகளின் நிலத்தில் தென்னைக்குருத்தில் பூச்சி பரவலை மருந்துகள் மூலம் அழிப்பது குறித்தும் தென்னிலை பகுதியில் கால்நடை சந்தைக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்தும், விவசாய நிலத்திற்கு செல்லும் பகுதியில் தார் சாலை அமைத்து தருவது குறித்தும். கிருஷ்ணராயபுரம் பகுதிக்குட்பட்ட ஆதி திராவிடர் காலனி பகுதியில் சாக்கடை பணிகள் பாதியில் நிற்பதை முழுமையாக சீர்செய்து முடித்து கொடுப்பது குறித்தும், கள்ளப்பள்னி, சித்தனம்பாடி சமத்துவ மயானத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பது குறித்தும், அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி சுற்றுர்சுலர் அமைத்தல் குறித்தும், சுள்ளப்பள்ளி கிராமத்தில் நீர்நிலை தொட்படி நீண்ட காலமாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும், பில்லப்பாளையம் பகுதியில் பல ஆண்டுகாலமாக விவசாய நிலத்திற்கு
செல்லும் வாய்க்கால் தூரிவரப்படாமல் உள்ளதை தூர்வாரி கொடுப்பது குறித்தும் கருங்களப்பள்ளி கிராமத்திங் விவசாய நிலத்தில் மழையால் வாழை மரம் சாய்ந்துள்ள விவசாமிகளுக்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்வது குறித்தும், குருங்கல்பள்ளி பகுதியில் காவிரி கூட்டு நீர் தினசரி வழங்க ஏற்படுத்துவது குறித்தும், பு.கடம்பன்குறிச்சி கிராமத்தில் ல்நடைகளுக்கு கால்நடை துறை சார்பில் தீவனம் வழங்குவது குறித்தும், தோட்டக்குறிச்சி முதல் நெரூர் பகுதியில் தமிழ்நாடு காகித ஆலை கழிவு நீர் குடிநீரில் கலப்பதை கடுப்பது குறிந்தும் வீரராக்கியம் பகுதியில் விவசாயம் பகுதியில் காய்க்கால்களை தூர்வாரி கொடுப்பது குறித்தும், வளையல்காரன் பகுதியில் நீர்வழிப்பாதை தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி கரையை பலப்படுத்தி தருவது குறித்தும், ஒழுக்குமுறை விற்பனை கூடங்கள் உற்பத்தி குழு அமைக்கப்படுவது குறித்தும். புணவாசிப்பட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்து நருவது குறித்தும்,
மற்றும் மதகுகளை சரி செய்வது குறித்தும், தென்னிலைப் பகுதியில் மின் கோபுர விளக்குகள் அமைத்து தருவது குறித்தும், அதே பகுதியில் தென்னிலை முதல் காரைந்தோட்டம் வரை சாலைகள் அமைத்து உழவர் சந்தைக்கு வியாபாரிகள் செய்வதற்கு ஏதுவாக அமைத்து தருவது குறித்தும். பஞ்சபட்டி
ஏரியை தூர்வாரி சரி செய்வது குறித்தும், புணவாரிப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாய பணி மேற்கொள்வது குறித்தும் மாவத்தூர் பகுதியில் தடுப்பணைக்கு முன் மற்றும் பின் பகுதியில் மரக்கன்றுகள் நடுவது குறித்தும். கூனம்பட்டி பகுதியில் ஆட்டு கொட்டகை அமைப்பதற்கான தொகை ஒதுக்கீடு செய்து வழங்குவது குறித்தும், நஞ்சனூர் பகுதியில் நியாய விகைக் கடையில் செரிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஏற்பாடு செய்து தருவது குறித்தும், தோகைமலை பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்தும், வடசேரி கிராம பகுதியில் ட்ரோன் தொழில்நுட்பம் வசதியுடன் விவசாயம் செய்வதற்கு மருந்து தெளிப்பான் ஏற்பாடு செய்வது குறித்தும், வளையல்காரன் புதூரில் நர்வழிப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவது குறித்தும். மாயனூரி வார சந்தையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்கு அடிப்படை வாதிகள் அமைத்து தருவது குறித்தும், விவாயிகளிடம் விவாதிக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் அளிக்கப்படுகின்ற கோரிக்கை மனுக்களுக்கு உரிய காலத்தில் அவர்களின் கோரிக்கை தீர்வு காணப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
மேலும், இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாம் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார், அதன் அடிப்படையில் 124 கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.
பின்னர் வேளாண்மை உழவர் நலத்துறையில் சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேமாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 பயணளிக்கு ரூ.2000 மதிப்பீட்டில் விசைத்தொளிப்பானும் 1 பயணிக்கு ரூ.647 மதிப்பீட்டில் தார்பாவினும், 1 பயனாளிக்கு ரூ.4.480 மதிப்பீட்டில் விசைத்தெளிப்பானும், 1 பயணணிக்கு ரூ.1.530 மதிப்பீட்டில் தார்பாயினும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2-பயனாளிக்கு மதிப்பில் ரூ.92,000 மதிப்பீட்டில் ரோட்டோவேட்டர். பவர் டில்லர் யீடரும்: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பீட்டில் பல்லாண்டு முருங்கை பரப்பு விரிவாக்கமும். கூட்டுறவு மற்றும் நுகர்வோர் நலத்துறை சார்பில் 3. பயனாளிக்கு தவா ரூ.50,000 மதிப்பில் ரூ.1,50,000 மதிப்பீட்டின் ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு வழங்குவதற்கான கடனுதவியும் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.2.50.657 மதிப்பீட்டிங் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வகுவாய் அலுவலர்கள் கண்ணன், கவிதா நிலம் எடுப்பு) வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன். கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் கந்தராசா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் சையுதீன், கோட்டாட்சியர்கள் ரூபினா(கரூர்), மதிஷ்பாதேவி(குளித்தலை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, மற்றும் அரசு அலுவர்கள் விவசாயிகள்.விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.