கரூரில் பூ கட்டி விற்கும் சில்லற வியாபாரிகள், பூ கமிஷன் மண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு,தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர்.
கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதியில் 300-க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனையாக மகளிர்கள் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்,நத்தம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்த கொள்முதல் செய்து வந்து விற்பனை செய்து வரும் கரூர் பூ மண்டி கமிஷன் ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பூ விற்பனை தொழில் செய்து வரும் சில்லரை வியாபாரிகளுக்கும், வெளியிலிருந்து வரும் பொதுமக்களுக்கும் அதே விலையிலும் விற்பனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பூக்கட்டும் தொழிலாளர்கள், மண்டி கமிஷன் தலைவரிடம் முறையிடுட்டனர்,
அப்போது வெளி ஆட்களுக்கு பூக்கள் வழங்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு வியாபாரிகள் ஆன எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் விதத்தில் உள்ளது,சில்லறை பூ வியாபாரிகளுக்கு எதிராக கரூர் மாரியம்மன் புஷ்ப வியாபாரம் மண்டி செயல்பட்டு வருவதாக பூ வியாபாரிகள் குற்றசாட்டினர்.
அனைத்து பூக்களும் கிலோ கணக்கில் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு தனியாகவும், வியாபாரிகளுக்கு தனியாகவும் ஏலம் விட வேண்டும் என்று அவங்களோட முக்கியமான கோரிக்கையாகவும் வைக்கப்பட்டுள்ளது.
அப்போது சிறு வியாபாரிகள் மண்டிகளை முற்றுகையிட்டு முறையீடு செய்தனர். அப்போது மாரியம்மன் பூ வளாகத்தின் சங்க தலைவர் முருகேசன், பூவிற்கும் சிறு வியாபாரிகள் ஆன பெண்கள் மற்றும் ஆண்களிடம் தகாத வார்த்தையில் பேசி வந்ததால், ஆத்திரமடைந்து பூ வியாபாரிகள் சங்கத் தலைவரை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் பூமாண்டி கமிஷன் தலைவர்,பூவிற்கும் சில்லரை வியாபாரியிடம் தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.